TRUST Exam Application and Notification 2023 - How to Apply

    2023-2024-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், 2023 டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஊரகத்திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

IMPORTANT DATES

1.விண்ணப்பம் மாணவர்கள் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க கடைசி நாள் – 14.11.2023 to 24.11.2023

2..விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் Online மூலம் 17.11.2023 முதல் 28.11.23 வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

3. Trust Date Of Exam -16.12.2023

(TRUST) Rural Students Talent Search Examination -2023 Application -Download


தேர்வில் பங்குபெற தேவையான தகுதிகள் - TRUST Exam Qualification

    அரசு ஆணை (நிலை) எண். 960, (இ2) துறை, நாள் 11.10.91 ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2022- 2023 கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது

ஆண்டு வருமானம்

    இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 1,00,000 /- மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் விண்ணப்பித்தல் -How To Apply Trust Exam

    14.11.2023 முதல் 24.11.2023 வரை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 24.11.2023 க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தேர்விற்கு இணையவழியாக விண்ணப்பிக்க நாள் 24.11.2023 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வுக்கான பாட விபரம் - Trust Exam Syllabus

    இத்தேர்வில் எட்டாம் வகுப்பில் மூன்று பருவங்களில் இருந்து கணிதம்.,அறிவியல். சமூக அறிவியல் பாடப்பகுதி. மனத்திறன் பகுதிகளில். வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் 25 வினாக்கள் வீதம், நான்கு பாடங்களுக்கும் சேர்த்து 100 வினாக்களைக் கொண்டுள்ளது.

1 – 25 கணிதம் -25 மதிப்பெண்

26 – 50 அறிவியல் -25 மதிப்பெண்

51 – 75 சமூக அறிவியல் -25 மதிப்பெண்

76 – 100 மனத்திறன் வினாக்கள் -25 மதிப்பெண்

    தேர்வெழுத வரும் தேர்வர்கள் கருப்பு நிற பந்துமுனை பேனாவினை ((Black Ball Point Pen)) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கல்வி உதவிதொகை விபரம் - Trust Scholarship Amount

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ. 1000/- வீதம் வழங்கப்படும்.


Post a Comment

0 Comments