4 மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டப்படி
அரையாண்டுத் தேர்வு நடைபெறும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 7) தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள்
தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான 'மிக்ஜாம்' புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில்
கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு
நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர்
வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த 3 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழைநீர் இன்னும்
ஒரு சில பகுதிகளில் தேங்கியுள்ளதால், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும்
கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் அரையாண்டு தேர்வு நாளை தொடங்குகிறது. ஆனால், மழை
பாதிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள்
ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டப்படி அரையாண்டுத் தேர்வு
நடைபெறும்.
இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன், அந்தந்த தலைமை
ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து, தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து தேர்வு
நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments