GO - 245 and 239 பற்றிய முழுமையான விளக்கம் - இன்றைய SMC
கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு உதவும்
Go 245
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் 2009ன் படி,
1. கல்வியின் தரத்தை கண்காணித்தல்.
2.பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்தல்.
3. அரசு மானியங்கள் பயன்படுத்துவதை கண்காணித்தல்.
4. பள்ளியை திறம்பட செயல்படுவதை கண்காணித்தல்.
ஏப்ரல் 2022 முதல் TNSED Parent செயலியில் பதிவு செய்யப்பட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றுதல். அனைத்து வகையான பள்ளிகளில் மொத்தம் மூன்று லட்சத்து 61 தேவைகள்
பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கண்ட தேவைகளை நிவர்த்தி செய்ய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து தேவைகள்
அனைத்தையும் முறையாக நிவர்த்தி செய்யவும் தீர்க்கவும் மாநில அளவிலான
கண்காணிப்பு குழு அமைத்தல்.
1. அரசின் தலைமைச் செயலர் - தலைவர்
2. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் - செயலர்
3. நிதித்துறை செயலாளர் - உறுப்பினர்
4. பொதுப்பணித்துறை செயலாளர் - உறுப்பினர்
5. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் - உறுப்பினர்
6. நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைச் செயலாளர் - உறுப்பினர்
7. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் - உறுப்பினர்
8. சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறை செயலாளர் - உறுப்பினர்
9. போக்குவரத்து துறை செயலாளர் - உறுப்பினர்
10. எரிசக்தி துறை செயலாளர் - உறுப்பினர்
11. உள்துறைச் செயலாளர் - உறுப்பினர்
12. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலாளர் - உறுப்பினர்
13. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் - உறுப்பினர்
14. தமிழ்நாடு மாதிரி பள்ளி செயலாளர் - உறுப்பினர்
Go 239
ஏப்ரல் 2022 முதல் செப்டம்பர் 2022 வரை tnsed பெற்றோர் செயலியில் பதிவு
செய்யப்பட்ட தீர்மானங்களில் 61% உட்கட்ட அமைப்பு சார்ந்த பதிவுகள் உள்ளது என்பதை
கண்டறியப்பட்டுள்ளது.
புதிய கட்டிடங்கள் கட்டுதல், பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல் மற்றும்
கட்டிடங்கள் இடித்தல் போன்ற அரசு திட்டங்கள் உள்ளன. இவற்றில் பள்ளி மேலாண்மை
குழுவை ஈடுபடுத்துவதன் மூலமாக உட்கட்டமைப்புகள் தேவைகள் நிவர்த்தி செய்ய அரசு
முடிவு செய்துள்ளது.
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் 2009ன் படி பிரிவு
21-ல் 2 மற்றும் பிரிவு 22 இல் உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு தேவைகள் அடங்கிய
பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரிப்பதன் மூலமாக உட்கட்டமைப்புகள் நிறைவேற்றப்படும்
என அறியப்படுகிறது.
உட்கட்டமைப்பு தேவைகள் கண்டறிந்து மாநிலத் திட்ட இயக்குனர் சமக்ரா சிக்ஷா,
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு
அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments