JACTO GEO Press Release 14.02.24

JACTO GEO Press Release 14.02.24
Click here to Download
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சந்திப்பு மற்றும் வாக்குறுதியினைத் தொடர்ந்து 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு

அன்புள்ள உயர்மட்டக்குழு உறுப்பினர்களே , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களே , வணக்கம் .

ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் 26.02.2024 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து , நேற்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் , மாண்புமிகு அமைச்சர்கள் திரு . ஏ.வ.வேலு , திரு . சு . முத்துசாமி , திரு . அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். 

இக்கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தனர் . இதன் தொடர்ச்சியாக , நேற்று மாலை மாண்புமிகு அமைச்சர் ( நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ) அவர்கள் பத்திரிக்கைச் செய்தி ஒன்றினை வெளியிட்டார் . போராட்ட நேரத்தில் , மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பத்திரிக்கைச் செய்தி கடும் அதிருப்தியினை ஏற்படுத்திய நிலையில் , ஜாக்டோ ஜியோ இந்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவித்து , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

ஜாக்டோ ஜியோவின் கோரிக்கையினை ஏற்று , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார் . இச்சந்திப்பின்போது , நமது வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது . பல்வேறு மாநில அரசுகள் திராவிட முன்னேற்றக் கழக அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் , தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதையும் , காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்க வேண்டும் , காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தோம் . மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் , பழைய ஓய்வூதியத் திட்டத்தினை இந்த அரசு நடைமுறைப்படுத்தாமல் வேறு அரசால் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அனைத்துக் கோரிக்கைகளையும் நிதி நிலைமையினைச் சீராக்கி , விரைவில் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தார். 

இச்சந்திப்பின்போது , மாண்புமிகு அமைச்சர்கள் திரு . உதயநிதி ஸ்டாலின் , திரு . ஏ.வ.வேலு , திரு . சு . முத்துசாமி , திரு . தங்கம் தென்னரசு , திரு . அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் மாண்புமிகு முதலமைச்சரின் செயலாளர்களும் உடனிருந்தனர் . மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வாக்குறுதியினை ஏற்றும் ஜாக்டோ ஜியோவின் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொண்டுள்ள மாறாத அன்பினையும் கருத்தில் கொண்டு , 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தினை தற்காலிகமாக ஒத்திவைப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது .

Jactto Geo Press Release 14.02.24 - Download here

Post a Comment

0 Comments