TN Budget 2024 - 2025 கல்வித்துறைக்கான அறிவிப்புகள்

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தற்போது (பிப். 19) தாக்கல் செய்து வருகிறார்.

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்:

நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு

பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு

*2023-24 பட்ஜெட்: ₹40,299 கோடி

*2024-25 பட்ஜெட்: ₹44,042 கோடி

Post a Comment

0 Comments