2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு
வெளியீடு ( மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம் )
தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கு புதிய
அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த் துறை
பணி: கிராம உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 2299
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
அரியலூர் - 21,சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் - 66,
திண்டுக்கல் - 29, தருமபுரி - 39, ஈரோடு - 141, காஞ்சிபுரம் - 109, கரூர் - 27,
கிருஷ்ணகிரி -33, மதுரை - 155, மயிலாடுதுறை - 13, நாகப்பட்டினம் - 68, நாமக்கல் -
68,பெரம்பலூர் - 21, புதுக்கோட்டை - 27, ராமநாதபுரம் - 29, ராணிபேட்டை 43, சேலம்
- 105,சிவகங்கை - 46, தஞ்சாவூர் - 305, தேனி-25, திருவண்ணாமலை - 103,
திருநெல்வேலி - 45, திருப்பூர் - 102, திருவாரூர் - 139, திருவள்ளூர் - 151,
திருச்சி - 104. தூத்துக்குடி - 77, தென்காசி - 18, திருப்பத்தூர் -32,
விருதுநகர் - 38, வேலூர் - 30, விழுப்புரம் - 31.
தகுதி: குறைந்தபட்ச கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை
பதவி உயர்வு: 10 ஆண்டுகளுக்கு பின்பு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி
உயர்வு வழங்கப்படும்.
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21 - 32, 37க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெற்றோரை இழந்தோர், ஆதரவற்ற
விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு
முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க
வேண்டும்.
0 Comments