என்.எம்.எம்.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விமானப் பயணம்

   என்.எம்.எம்.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விமானப் பயணம்!
என்.எம்.எம்.எஸ்., தேர்வில், தேர்ச்சி பெற்ற மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்களை பாராட்டும் விதமாக, பெங்களூரு அழைத்து செல்லப்பட்டனர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட(என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு, கடந்த பிப்., 3ம் தேதி நடந்தது. கோவை மாவட்டத்தில், 208 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

இதில், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் திக் ஷன்யா, காவியா, ஆகாஷ், மிர்ஜன் ஆதித்யா ஆகிய நான்கு பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டுக்கு தலா, 12 ஆயிரம் வீதம், 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவர்.இந்த நான்கு மாணவர்களுடன், பயிற்சி அளித்த ஆசிரியைகள் சுகுணா, மேரி திவ்யா ஆகியோரையும், பள்ளி தலைமையாசிரியர் மைதிலி, பெங்களூருவுக்கு விமானத்தில் அழைத்துச்சென்றார். 

நேற்று முன்தினம் காலை புறப்பட்ட இவர்கள், நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.முதல் முறையாக விமானத்தில் பயணித்த மாணவர்கள், தங்கள் அனுபவத்தை சக மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

தலைமை ஆசிரியை மைதிலி கூறுகையில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாகவும், வரும் ஆண்டுகளில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார்.

Post a Comment

0 Comments