SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு
தயார் - பதிவிறக்கம் செய்வது எப்போது? எவ்வாறு?
SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 20.03.2024 முதல்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பள்ளி மாணவர்களுக்கான
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 15.03.2024 முதலும் , தேர்வு மையப் படிவங்களை (
Centrewise Nominal Roll , Seating Plan , CSD Forms ш Coverwise Script Detail )
18.03.2024 பதிவிறக்கம் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது . தற்போது
அத்தேதிகளுக்கு மாற்றாக 20.03.2024 முற்பகல் முதல் தேர்வுகூட நுழைவுச்சீட்டினை
அனைத்து பள்ளிகளும் மற்றும் 20.03.2024 பிற்பகல் முதல் தேர்வு மைய படிவங்களை
தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்களது User ID . Password- ஐ
பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ளுமாறு , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments