தபால் வாக்களிக்க இன்றே ஏப்.18 கடைசிநாள்: மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது - தலைமைத் தேர்தல் அதிகாரி

   தபால் வாக்களிக்க இன்றே (ஏப்.18) கடைசிநாள்: மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது - தலைமைத் தேர்தல் அதிகாரி
Click here to Download
தபால் வாக்களிக்க இன்று கடைசிநாள்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் Today is the last day for postal voting: Chief Electoral Officer informs

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் தபால் வாக்கைச் செலுத்த வியாழக்கிழமை (ஏப்.18) கடைசி நாளாகும்.

அலுவலக வேலை நேரத்தில் தபால் வாக்கை தேர்தல் நடத்தும் அதிகாரி யிடம் இருந்து பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று தலைமைத் தேர் தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இதன்பிறகு தபால் வாக்கைச் செலுத்த வாய்ப்பு வழங்கப்படாது எனவும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:

மக்களவைத் தேர்தல் பணியில் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசி ரியர்கள் ஈடுபடவுள்ளனர். அவர்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தபால் வாக்கைச் செலுத்த விண்ணப்பங்களை அளித்திருந்தனர்.

ஏற்கெனவே தபால் வாக்கைப் பெற்று அதைப் பூர்த்தி செய்து அளித்தி ருந்தால் அவை அனைத்தும் திருச்சியில் உள்ள பொது மையத்துக்கு எடுத் துச் செல்லப்படும். அங்கு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கென வைக்கப் பட்டிருக்கும் வாக்குப் பெட்டியில் தபால் வாக்குகள் சேர்க்கப்படும்.

தபால் வாக்கைச் செலுத்துவதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை மாலையுடன் (ஏப்.18) நிறைவடைகிறது. அதன்பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும் வாக்கைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்க முடி யாது.
6,137 மண்டல குழுக்கள்: துணை ராணுவப் படையினர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பழுதுநீக்குநர்கள், நுண்பார்வையாளர்கள் ஆகி யோரைக் கொண்டு 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மண்டல குழு அமைக் கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 6,137 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 68,000 வாக்குச் சாவடிகளில், 44, 800 வாக்குச் சாவடிக ளில் இணையதளம் மூலமாக வாக்குப் பதிவு நடவடிக்கைகள் நேரலை யாக ஒளிபரப்பு செய்யப்படும். மீதமுள்ள வாக்குச் சாவடிகளில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

அதாவது, சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட வாக்குச் சாவடிகளில் 65 சதவீத சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிச்சயம் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments