புது விதிகள்.. மே 1 முதல் அமல்.. வங்கியில் ரூ.1000 மேல் பணம் அனுப்பினால் கட்டணம்.. IMPS முதல் PAN கார்டு வரை

    புது விதிகள்.. மே 1 முதல் அமல்.. வங்கியில் ரூ.1000 மேல் பணம் அனுப்பினால் கட்டணம்.. IMPS முதல் PAN கார்டு வரை!

 
வங்கி மினிமம் பேலன்ஸ், பான் கார்டு கேஒய்சி, ஐஎம்பிஎஸ் பணப் பரிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான புதிய கட்டணம் என்று மே 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

இந்த விதிகள் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரப்போகின்றன.
2024-25ஆம் நிதியாண்டு தொடங்கியதில் இருந்து புதிய விதிகளுக்கு துளியும் பஞ்சமில்லை. சாமானிய மக்கள் முதல் வருமான வரி செலுத்தும் மக்கள் வரையில் நேரடியாக மாற்றத்தை எதிர் கொள்ளும்படியான விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆனால், மே 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் விதிகள் நேரடியாக வங்கி வாடிக்கையாளர்களை பாதிக்கும்.

பான் கார்டு கேஒய்சி (PAN Card KYC): முதலில் பான் கார்டு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி விதிகளில் இருந்து தொடங்குவோம். சொல்லப்போனால், இந்த விதி மட்டும் ஏப்ரல் 30ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது. மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை தொடங்கும்போது, அதில் கொடுக்கப்படும் உங்களது பெயர், பான் கார்டில் இருக்கும் பெயரோடு ஒத்துபோக வேண்டும்.

இல்லையென்றால், உங்களது மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு நிகாரிக்கப்படும். அதேபோல பிறந்த தேதியும் சரியாக இருக்க வேண்டும். யுனிபார்ம் கேஒய்சி விதிகளின்படி இது அமலுக்கு வந்துள்ளது. ஆகவே, வரும் நாட்களில் பான் கார்டில் உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் அல்லது பிழை இருந்தால், அதை உடனே சரி செய்து விடுங்கள்.

ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் (IMPS Charges): மே 1ஆம் தேதி முதல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆகவே, மே 1ஆம் தேதிக்கு பிறகு ஐஎம்பிஎஸ் மூலம் ரூ.1000-க்கும் கீழ் பணம் அனுப்பினால் ரூ.2.5 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல ரூ.1000 முதல் ரூ.25000 வரையில் அனுப்பினால் ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும், ரூ.25000 முதல் ரூ.5 லட்சம் வரையில் பணம் அனுப்பினால், ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும். டெபிட் கார்டு வருடாந்திர கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் அதுவே கிராமப்புறங்களில் ரூ.90ஆக எடுத்து கொள்ளப்படும். இந்த விதிகள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு கட்டணங்கள் (Minimum Balance, Credit Card Charges): யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் பராமரிப்பில் மே 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆகவே, யெஸ் ப்ரோ மேக்ஸ் சேமிப்பு கணக்கில் ரூ.50000 மினிமம் பேலன்ஸ் தொகை இருக்க வேண்டும்.

இல்லையென்றால், அதிகபட்சமாக ரூ.1000 கட்டணம் செலுத்தவேண்டும். அதேபோல யெஸ் ப்ரோ பிளஸ், யெஸ் எசென்ஸ் மற்றும் யெஸ் ரெஸ்பெக்ட் சேமிப்பு கணக்குகளில் ரூ.25000 மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், அதிகபட்சமாக ரூ.750 கட்டணம் இருக்கும். யெல் வேல்யூ மற்றும் கிஷான் கணக்குக்கு மினிமம் பேலன்ஸ் ரூ.5000 இருக்கிறது.

இல்லையென்றால், ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல யெஸ் மை ஃபர்ஸ்ட் கணக்குக்கு ரூ.2500 மினிமம் பேலன்ஸ் பராமரிப்பு இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், யெஸ் வங்கியின் கிரெடிட் கார்டில் ஸ்டேட்மெண்ட் சுழற்சிக்கு (Statement Cycle) 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதாவது, ஒரு ஸ்டேட்மெண்ட் சுழற்சியில் ரூ.15000-க்கும் மேல் யூடிலிட்டி பரிமாற்றம் செய்திருந்தால், ஜிஎஸ்டி மற்றும் 1 சதவீதம் வரி விதிக்கப்படும். இதேபோல டெபிட் கார்டுக்கும் புதிய விதிகள் இருக்கின்றன. அதன்படி, யெஸ் வங்கி ஏடிஎம் தவிர்த்து மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறை பணம் மட்டுமே எடுக்கலாம். அதன்பின் கட்டணம் வசூலிக்கப்படும்.

முன்பு சொன்னதை போலவே, கிரெடிட் கார்டு யூடிலிட்டி பரிமாற்றத்தில் ஐடிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கும் மே 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதியின்படி யூடிலிட்டி பரிமாற்றம் ரூ.20000-க்கும் மேல் சென்றால், 18 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் 1 சதவீத வரி செலுத்த வேண்டி இருக்கும்.

Post a Comment

0 Comments