அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர ஆன்லைன்
விண்ணப்பம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர பிளஸ் 2 முடித்தவர்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தொழில்நுட்பக்கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட
அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பதிவு கட்டணம் ரூ.150: தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக
2-ம் ஆண்டு சேருவதற்கான (லேட்ரல் என்ட்ரி முறை) ஆன்லைன் விண்ணப்ப பதிவு
தொடங்கியுள்ளது.
கணிதம், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ்-2 முடித்த மாணவர்கள்
மற்றும் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு2 ஆண்டு ஐடிஐ படித்தவர்கள்
இதற்கு விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மே மாதம்
20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுக் கட்டணம் ரூ.150. இக்கட்டணத்தை டெபிட் கார்ட்டு, கிரெடிட் கார்டு அல்லது
நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர்
பதிவுகட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
இணையவழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம்
விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மையங்களின் பட்டியல் மேலே
குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments