7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
அறிவிப்பு!
மே 7ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
அறிவித்துள்ளது
மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த
காற்று, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை
காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
03.05.2024 முதல் 06.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்
காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30
கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்
பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல்
40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி,
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு
இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.05.2024 மற்றும் 09.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்
காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
03.05.2024 (5ល់ 07.05.2024 : அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள்
மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக
குறையக்கூடும்.
03.05.2024 முதல் 07.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள்
மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட
அதிகமாக இருக்கக்கூடும். 03.05.2024 & 04.05.2024: வட தமிழக உள்
மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக
அதிகமாக இருக்கக்கூடும்.
03.05.2024 முதல் 07.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச
வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில்
41°-44° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°-40°
செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்
36°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
0 Comments