EMIS எண் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? விரிவான தகவல்கள் இதோ

     EMIS எண் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? விரிவான தகவல்கள் இதோ !
பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் போன் செய்து எமிஸ்(EMIS) போர்டல் தளத்தில் உங்களது மகன் அல்லது மகளது விவரங்களை அப்டேட் செய்து வருகிறோம்.

அதற்கு பெற்றோர்களான உங்களது எண்ணை பதிவு செய்ய ஓடிபி தேவைப்படுகிறது. அதை சொல்லுங்கள் என்று கேட்கும் அதிகப்படியான அழைப்புகள் வருகிறது.

இதே போல வங்கிகளில் இருந்து பேசுகாதாக போன் செய்து ஓடிபி கேட்டு மோசடி செய்வதால் பல பெற்றோர்கள் தங்களது ஓடிபிகளை சொல்ல மறுக்கின்றனர். இதற்காக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கல்விக்காக கேட்கப்படுவதாவும் பெற்றோர்கள் ஓடிபி எண்ணை ஆசிரியர்களுக்கு தெரிவித்து. உதவி புரியுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் அதற்கான தயக்கங்கள் நீடிக்கின்றன

எல்லாம் சரி அந்த எமிஸ் போர்டல் என்றால் என்ன? அதன் பலன் என்ன? அது எதற்காக செய்யப்படுகிறது? அதில் ஏன் பதிவு செய்ய வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் நம்மிடையே எழும் அதற்கான பதில்களை எல்லாம் உங்களுக்கு எளிமையாக சொல்கிறோம்.

எமிஸ்(EMIS) என்பதன் விரிவாக்கம் Educational Management Information System - கல்வியியல் மேலாண்மை தகவல் அமைப்பு என்பதாகும். இது கல்வி சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் இதர பணியாளர்கள்,கல்விக் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தைக் குறித்த தகவல்களையும் சேமித்து பாதுகாக்கும் ஒரு அமைப்பாக இருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்களின் தரவுகள் அவ்வப்போது மார்க் சீட்டுகளில், பதிவேடுகளில் பதிவு செய்து கொடுக்கப்படும். அந்த தரவுகளை நீண்ட காலம் பாதுகாப்பது சிரமமாக இருந்து வந்தது. அதற்கு மாற்றாக தான் இந்த அமைப்பு தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு என்ன பலன்?
இந்த எமிஸ் தளத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட எட்டு இலக்க எண் உருவாக்கப்படும். இது அந்த மாணவர் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரையான அனைத்துத் தகவல்களையும் ஒருங்கே கொண்டிருக்கும்.

Pre KG அல்லது முதலாம் வகுப்பில் சேரும்பொழுது ஒரு மாணவருக்கு இந்த தனிப்பட்ட எட்டு இலக்க எமிஸ் எண் வழங்கப்படும். அதன் பின்னர் அவர் எத்தனை பள்ளிகளுக்கு மாறினாலும் அந்த ஒரே ஒரு எமிஸ் எண்ணை கொண்டு அவரது கல்வி தரவுகளை புதிய பள்ளிக்கு மாற்றிக் கொள்ளலாம் மற்றும் வருங்கால பதிவுகளையும் அதே எண்ணில் சேமித்துக் கொள்ளலாம்.

என்னென்ன தரவுகள் சேமிக்கப்படும்?
ஒரு மாணவரின் பெயர்

பிறந்த தேதி

ஆதார் எண்

பெற்றோர்கள் விபரம்

படிக்கும் பள்ளி

இதற்கு முன்னர் படித்த பள்ளி

தனியார் பள்ளியில் சேர்ந்தால் கல்வி கட்டண விபரங்கள்

மாணவரின் வருகை பதிவு

மாணவரின் மதிப்பெண் பட்டியல்கள் என அனைத்துமே இந்த எம்எஸ்என்னில் சேமித்து வைக்கப்படும். இதை தினசரி ஆசிரியர்கள் அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள்.

பெற்றோர்களுக்கு தங்களது குழந்தையை ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாற்றும்போது பெற்றோர்கள் அனைத்து சான்றிதழ்களையும் தூக்கிக்கொண்டு அலைய தேவை இல்லை. பழைய பள்ளியில் இருந்து மாணவரின் எமிஸ் எண்ணை மட்டும் கேட்டு புதிய பள்ளியில் தெரிவித்தால் போதுமானது.

அதுபோக கல்வி சார்ந்த ஏதேனும் திட்டங்கள் அல்லது தகவல்களை பெற்றோர்களுக்கு அரசோ அல்லது பள்ளியோ சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் மாணவர்களுடன் ஐடியுடன் இணைக்கப்படும்.

ஒடிபி எப்போதெல்லாம் வேண்டும்?

முதல் முறை மாணவருக்கு எமிஸ் எண் வழங்கப்படும் போது தேவைப்படும்

தற்போது பெற்றோர்களின் எண்களை சரிபார்த்து அப்டேட் செய்யும் போது கேட்கப்படும்

ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு தரவுகளை மாற்றுவதற்கும் பெற்றோர்களின் தொலைபேசிக்கு வரும் ஓடிபி முக்கியமானது.

அதை வைத்து மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ள தேவைப்படும்.

அதுமட்டுமில்லாமல் மாணவர்களின் விபரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலும் பெற்றோர்களின் எண்ணிற்கு வரும் ஓடிபி கொண்டு அதை சரி செய்ய இயலும்.

Post a Comment

0 Comments