TET வழக்கை விரைவாக முடித்து தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப
கோரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கை விரைவாக முடித்து தலைமையாசிரியர் பணியிடங்களை
நிரப்ப வேண்டும் - கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கை விரைவாக முடித்து தலைமையா சிரியர்
பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கல்வி மேம் பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தி
யுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்ச
நீதிமன் றத்தில் நிலுவையில் இருப்பதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற் பட்ட தொடக்க,
நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகளில் தலைமை யாசிரியர் பதவி உயர்வு வழங்குவ தில் தடை
ஏற்பட்டுள்ளது.
தலை மையாசிரியர் இல்லாத பள்ளிக ளில் பணிபுரியும் மூத்த ஆசிரியர் கள்
தலைமையாசிரியர் பொறுப் பேற்று பள்ளியின் அன்றாட நடைமுறைகளை கவனிக்க வேண் டிய
கட்டாயம் உள்ளது.
இதனால் மூத்த ஆசிரியரால் வழக்கமான கற்பித்தல் பணிகளில் ஈடுபடமுடியாது. தலைமை
ஆசிரி யர் இல்லாத ஈராசிரியர் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்ப டும் நிலை
ஏற்பட்டுள்ளது. மாண வர்களுக்கு ஏற்படும் கற்றல் பாதிப் புகளையும் பள்ளிகளில்
ஏற்படும் நிர்வாக இடர்பாடுகளையும் கருத் இல்லாத பள்ளிகளில் தலைமை ஆசிரியர்
பொறுப்பில் உள்ள மூத்த ஆசிரியரின் கற்பித்தல் பணி களை மேற்கொள்ள தற்காலிக
ஆசிரியர்களை உடனடியாக நிய மிக்கவேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்
நியமனங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டு களுக்கு மேலாக எந்தத் தடையும் இல்லாமல்
பதிவு மூப்பு அடிப்ப டையில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவது நடைமுறை யில்
இருந்து வந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளி யிடுவதற்கு முன்பாக பணி நியம னம் பெற்ற
ஆசிரியர்கள் பணியில் தொடரவும் ஊதிய உயர்வு பெற வும் பதவி உயர்வு பெறவும் எந்த
நிபந்தனைகளும் ஆசிரியர் தகு தித் தேர்வுக்காக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்
(சஇபஉ) வெளி யிட்ட அறிவிப்பாணையில் தெரி விக்கப்படவில்லை.
0 Comments