சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு: பள்ளிக் கல்வி
இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவித்தது
தொடா்பான வழக்கில், பள்ளிக் கல்வி இயக்குநா், செயலா் பதிலளிக்க சென்னை
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில்
தாக்கல் செய்யப்பட்ட மனு:
தமிழக பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக
கருதப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அறிவிப்பாணை வெளியிட்டாா். இதன்
அடிப்படையில், சனிக்கிழமைதோறும் பள்ளிகளுக்கு மாணவா்களும், ஆசிரியா்களும் வருகை
தருகின்றனா்.
பள்ளி வேலை நாள்களை அதிகரிப்பது, குறைப்பது, விடுமுறை நாளாக அறிவிப்பது ஆகியவை
தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவாகும். இதன்படி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு
மட்டுமே முடிவெடுக்க முடியும். ஆனால், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு நிகழ்
கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவிப்பாணை வெளியிட அதிகாரம்
கிடையாது.
வாரத்தில் ஆறு நாள்களும் வேலை நாள்களாக இருப்பதால், ஆசிரியா்கள், குழந்தைகள்
மனரீதியாக பாதிக்கப்படுகின்றனா். அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டம்
2009-இன்படி, மாணவா்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றனா். ஒன்றாம் வகுப்பு
முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தியுள்ளனா்.
இவா்களுக்கு பள்ளிக் கல்வியில் குறைந்த நாள்களே வேலை நாள்களாக சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பள்ளிக் கல்வி இயக்குநா் கவனத்தில் எடுத்துக்
கொள்ளவில்லை. அவா் யாரையும் கலந்தாலோசிக்காமல், 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக
அறிவித்து, தன்னிச்சையாக முடி.
0 Comments