எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது
Click here to Download
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.

இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவில், 681 எம்பிபிஎஸ் இடங்களும், 971 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்கான 3-ம் சுற்று (மாப் அப்) கலந்தாய்வுக்கான பதிவு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நேற்று தொடங்கியது. 

கல்லூரிகளில் இடங்களை வரும் 12 முதல் 14-ம் தேதிவரை தேர்வு செய்யலாம். தரவரிசைப்படி இடங்கள் பெற்றவர்கள் விவரங்கள்வரும் 17-ம் தேதி வெளியிடப்படும். இடஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் 23-க்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments