கணித திறனறி தேர்வு 3,333 பள்ளி மாணவர்கள் எழுதினர்

கணித திறனறி தேர்வு : 3,333 பள்ளி மாணவர்கள் எழுதினர்
Click here to Download
கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடந்த கணித திறனறி தேர்வை, 3,333 பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், ஆண்டுதோறும் கணித திறனறி தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.

இந்தாண்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு, கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடந்தது.

இதற்கு, 5 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும், 3,867 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். 80 ஒரு மதிப்பெண் வினாக்கள் அடங்கிய தேர்வை, 3,333 பேர் எழுதினர்.

மதிப்பெண் அடிப்படையில், 5ம் வகுப்பில் முதல், 26 பேர் உட்பட, 6, 7, 8 என ஒவ்வொரு பிரிவிலும் சேர்த்து, 104 பேருக்கு ரொக்க பரிசு வழங்கப்படவுள்ளது.

அதாவது, ரூ.2,000, ரூ.1,500, ரூ.500, ரூ.250 என மொத்தம் ரூ.70 ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தேர்வு முடிவுகள், பிப்., இரண்டாவது வாரம் வெளியிடப்படும் என, மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments