ஆசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய
வாய்ப்பு
உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்குரிய விண்ணப்பங்களில்
திருத்தம் செய்ய என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும்,
இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)
சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர்
நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு பிப்ரவரி 16 முதல் 28-ம் தேதி வரை
நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த டிசம்பர் 9-ல் தொடங்கி
ஜனவரி 2-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய
பட்டதாரிகளுக்கு என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள்
/csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக ஜனவரி 4, 5-ம் தேதிகளில் திருத்தங்களை
செய்துக் கொள்ளலாம்.
இதுதவிர, தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை
/nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும்
சிரமங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக
அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய
விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments