பள்ளிகளில் சினிமா ஒளிபரப்பு; சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க
உத்தரவு
தமிழக அரசு பள்ளிகளில், மன்ற செயல்பாடுகளாக, மாதத்துக்கு ஒரு சிறார் சினிமா
திரையிடப்படுகிறது. அதிகபட்சம், 40 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய படங்களை, தலைமை
ஆசிரியர்கள், மாலை வேளையில் திரையிடுகின்றனர்.
இந்நிலையில் ஜனவரியில், பள்ளிகளில் சினிமா திரையிடப்படும் விதம் குறித்து
வழிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 'டீரிம் ஆப் ட்ரீ' எனும், 33 நிமிடம்
ஓடக்கூடிய சிறார் சினிமா, 'எமிஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் திரையிடும்போது, சிறப்பு அழைப்பாளர் வரவழைக்கப்பட்டு, ஒளிபரப்பு முடிந்த
பின், சினிமா குறித்த விமர்சனம், கருத்து, மாணவ, மாணவியரின் விமர்சனம் என, 2:30
மணி நேரத்துக்கு கூட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தகுதியான சிறப்பு அழைப்பாளர்களை தேடி பிடிக்கும் பணி, தற்போது கூடுதலாக
சேர்ந்துள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
0 Comments