5 ஆண்டு மேலாண்மை படிப்புக்கான ஜிப்மேட் தேர்வு மாணவர்கள் மாரச் 10 வரை விண்ணப்பிக்கலாம்

    5 ஆண்டு மேலாண்மை படிப்புக்கான ஜிப்மேட் தேர்வு: மாணவர்கள் மாரச் 10 வரை விண்ணப்பிக்கலாம்
ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு மாணவர்கள் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நம் நாட்டில் புத்தகயா மற்றும் ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உட்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 26-ம் தேதி மதியம் 3 முதல் 5.30 மணி வரை முநடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் /exams.nta.ac.in/JIPMAT/ என்ற வலைத்தளம் மூலம் மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை மார்ச் 11-ம் தேதி வரை செலுத்தலாம். தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 13 முதல் 15-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்கு தேர்வுக் கட்டணமாக ஒபிசி மற்றும் பொதுப்பிரிவினர் ரூ.2000-ம், இடபிள்யுஎஸ், எஸ்சி/எஸ்டி, 3-ம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.1000-ம் செலுத்த வேண்டும். இந்த தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரம் நடைபெறும். இதுதவிர பாடத்திட்டம், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது jipmat@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments