SET தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றைய முக்கிய அறிவிப்பு.

மாநிலத் தகுதித் தேர்வு ( SET ) 2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை எண் . 01/2024 )
20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு ,
இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது . அரசாணை ( D
) எண் . 278 , உயர்கல்வித் ( எச் 1 ) துறை , நாள் .17.12.2024 ன்படி மாநிலத்
தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்பட வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் , UGC வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் , மாநிலத் தகுதித்
தேர்வு , வருகின்ற 2025 மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் CBT மூலம்
நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்விற்கான நுழைவுச்சீட்டு ( Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில்
( https://www.trb.tn.gov.in ) தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக பதிவேற்றம்
செய்யப்படும் . அதனை பதவிறக்கம் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு : மேற்படி நுழைவுச் சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுப்பப்பட
மாட்டாது .

0 Comments