பள்ளி மாணவரும் காப்பாற்றச் சென்ற தலைமை ஆசிரியரும் நீரில்
மூழ்கி உயிரிழப்பு

ஒசூர் அருகே விவசாய சேமிப்புத் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த
நிலையில், அவரை காப்பாற்றுச் சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எலுவப் பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய
துவக்கப்பள்ளி உள்ளது. அங்கு மூன்றாம் வகுப்பு படித்துவரும் மாணவர் நித்தின்
(வயது 8), அருகே உள்ள விவசாயத் தோட்ட நீர் சேமிப்புத் தொட்டியில் விழுந்துள்ளார்.
மாணவன் விழுந்ததை பார்த்த பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கௌசி சங்கரும் (வயது 52)
நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மாணவன் தலைமை ஆசிரியர் இருவரும் உயிரிழந்த
சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments